.
.

.

Latest Update

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்


K.-Balachander-who-introduced-many-actors

தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள்,நடிகைகளை அறிமுகம் செய்து வைத்தவர் கே.பாலசந்தர். பல வெற்றிப் படங்களை இயக்கிய இவர் அனைவராலும் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்டார்.

பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. 84 வயதான இவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்றிரவு 7 மணியளவில் காலமானார்.

அவரது உடலுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இவரது மறைவு காரணமாக நாளை படப்பிடிப்பு மற்றும் சினிமா பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles