.
.

.

Latest Update

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க மும்மொழிகளில் தயாராகும் பிரம்மாண்டமான படம்…


Prabhu Deva Director Vijay Tamanah (1)தமிழ் திரை உலகின் திறமைமிக்க பிரபலங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டு , மொழிக்கு அப்பாற்பட்டு சென்று தங்களது வெற்றிக் கொடியை நாட்டுவது உண்டு. அந்த வகையில் நடன இயக்குனர், நடிகர் , இயக்குனர் என்று எல்லா வகையிலும் தேசமெங்கும் கொடிகட்டி பறக்கும் பிரபு தேவா என்றென்றும் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர். தனக்கு பிடித்த , பொருந்திய வேடங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்கும் பிரபு தேவா , இயக்குனர் விஜய் இயக்கத்தில் தமன்னா உடன் இணைந்து நடிக்க இருப்பதுக் குறிப்பிடத்தக்கது. கிரீடம் , மதராசபட்டினம் , தெய்வ திருமகள் , தலைவா உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய இயக்குனர் விஜய்க்கு இதுவே முதல் ஹிந்தி படமாகும். இவரது படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதால் கூடுதல் கவனம் ஈர்க்கிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் Sonu Sood முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.ஷாரூக் கானின் ஹாப்பி நியூ இயர் திரைப்படம் மூலம் தேசிய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்றப பெயரை ஈட்டிய ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் இந்த படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார்.பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முனைவர் கே.கணேஷ் மற்றும் மும்பையை சேர்ந்த பாப் கார்ன் எண்ட்யர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.மற்ற நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles