தமிழ் திரைப்படங்களில் குப்பை பொறுக்கும் ஒருவன் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவதுப் போன்றக் காட்சிகள் வந்ததுண்டு.சிலப் படங்களில் நாயகன் ஒரே பாடலில் மிக பெரிய பணக்காரனாக உயர்வது போன்றக் காட்சிகள் இடம் பெறுவது உண்டு. இது சாத்தியமா என்பதை மக்கள் யோசிக்க கூட முடியாத அளவுக்கு பெரும்பாலும் இந்த பாடலில் நடிப்பவர்கள் மக்களின் அபிமானம் பெற்ற நாயகர்களாகவே இருப்பார்கள்.சமீப காலமாக ரசிகர்களும் இத்தகைய பாடல்களை ஒரு வித நகைச்சுவை உணர்வோடுதான் ரசிக்க ஆரம்பிக்கின்றனர். யு tube மூலம் நமது நாட்டின் பெரும் பாலும் ரசிகர்களை கவர்ந்து உள்ள ” Culture machine’ நிறுவனத்தின் பிரதான அங்கமான புட் சட்னி நிறுவனம் , ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி என்கிற விஷயத்தை நகைசுவையுடன் ஒரு ஆல்பமாக வழங்கி உள்ளனர். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் பாடலில் நடித்து உள்ளார். ரசிகர்களை சிரிக்க வைக்கும் இந்த வீடியோவை தொடர்ந்து இத்தகைய பல வீடியோக்களை ‘புட் சட்னி’ நிறுவனம் வெளி இட உள்ளது.