தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வெள்ள நிவாரண நிதிக்கு இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கண மழை தமிழக மக்களின் வாழ்வாதரங்களை சூறையாடிச் சென்று விட்டது. இதில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர்.
தற்போது 3 நாட்களாக சென்னை மக்கள் மெல்ல இயல்புக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு நடிக, நடிகையரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது இயக்குனர் ஷங்கர் தமிழக வெள்ள நிவாரணத்திற்கு சுமார் 10 லட்சங்களை அவர் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.