இரட்டை வேடங்களில்
ஹரிகுமார் நடிக்கும் “ மதுரை மணிக்குறவன் “
தூத்துக்குடி, மதுரை சம்பவம், திருத்தம், போடி நாயக்கனூர் கணேஷன் போன்ற படங்களில் நடித்ததுடன் காதல் அகதி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹரிகுமார் அடுத்து போலீஸ் அதிகாரியாகவும், மணிக்குறவனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்திற்கு “ மதுரை மணிக்குறவர் “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தை காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.
கதாநாயகியாக மாதவிலதா நடிக்கிறார்.இவர் தெலுங்கில் பத்து படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார். கோட்டா சீனிவாசராவ், பருத்திவீரன் சரவணன், கே.ஜி.காளையப்பன் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். மற்றும் பவித்ரா, எம்.எஸ்.பாஸ்கர், மாத்யூ, டெல்லிகணேஷ், ராஜ்கபூர், முத்துகாளை, நெல்லை சிவா, சுஜாதா, அனுமோகன், போண்டாமணி, ஜே.லலிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிரதாப்
கலை – முருகன்
பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா
ஸ்டன்ட் – ஜாக்குவார் தங்கம்
தயாரிப்பு நிர்வாகம் – விஜயகுமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ராஜரிஷி.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..
இந்த மதுரை மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதன் மதுரை மணிக்குறவனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்துடன் கற்பனையை கலந்து திரைக்கதை அமைத்துள்ளோம். பரபரப்பான திரைக்கதையாக இருக்கும். மதுரை, சென்னை, காரைக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் இயக்குனர்.