.
.

.

Latest Update

இலங்கை தமிழர்களின் படம் “சிவப்பு”


unnamed (5)பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா என்டர்டைன்மென்ட்(பி)லிட் – புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் பட நிறுவனங்கள் இணைத்து வழங்க கழுகு வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு”

ராஜ்கிரண் அழுத்தமான கதாபாத்திரத்தில் கோணார் என்ற வேடமேற்று இருக்கிறார்.

நாயகனாக நவீன்சந்திரா நடிக்கிறார்.கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா,செல்வா,போஸ்வெங்கட்,ஏ.வெங்கடேஷ்,அல்வாவாசு, பூ ராம், சோனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இது இலங்கை தமிழர் பற்றிய படம். ஆனால் இலங்கையில் எந்த வித படப்பிடிப்பும் நடத்தப் பட வில்லை. இங்கேயே தான் படப்பிடிப்பை நடத்தினோம்.

இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கி குடியுரிமைக்காக ஏங்குகிறவர்களின் வாழ்க்கை பதிவு தான் சிவப்பு.

இங்கிருந்து ஆஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குத் தப்பிப்போக நினைத்து, முடியாதவர்களின் மன வலி, காதலையும் உள்ளடக்கிய கதை. பாதுகாப்புத் தர வேண்டிய சமூகம் அவர்களை பந்தாட நினைக்க, பாதுகாப்பு அரணாக ராஜ்கிரண் கோனார் என்கிற கம்பீர வேடமேற்கிறார்.

இதில் அழகிய காதல் இருக்கு ! அடித்தட்டு மக்களின் வலியும் இருக்கு.

படம் பார்க்கிற ஒவ்வொரு மனிதனின் மனதை ஒரு நிமிடம் உலுக்கி விடும் படமே சிவப்பு.

இந்தப் படத்தைப் பார்த்த திரு.தேசிகன், ராஜ்கிரணின் நடிப்பில் மயங்கி படத்தை மொத்தமாக வாங்கி எஸ்.எஸ்.மீடியா நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என்றார் இயக்குனர் சத்யசிவா.

இப்படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles