.
.

.

Latest Update

ஈட்டி திரைப்படம் என் இரண்டு வருட உழைப்பு – நடிகர் அதர்வா முரளி.


Eetti Succees Meet Stills (19)ஈட்டி படத்தின் வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் , நாயகன் அதர்வா முரளி , இயக்குநர் ரவி அரசு , ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு , படத்தொகுப்பாளர் ராஜா முகமது மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் ரவிஅரசு பேசியது , ஈட்டி திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்களிடையே “ மௌத் டாக்கால்” படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனக்கு படத்தை பற்றி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் மிகச்சிறந்த விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது. நிஜமாகவே எனக்கு இது மனதுக்கு நெருக்கமான விமர்சனங்களாக அமைந்துள்ளது. படத்தை பற்றி ஒரு “ நெகடிவ் விமர்சனம்” கூட வரவில்லைஎன்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.படத்தின் தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் அவர்கள் படம் வெளியாகும் சமயத்தில் படத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பர பணிகளில் ஈடுபட்டு படத்தின் வெற்றிக்கு வித்திட்டார். தயாரிப்பாளருக்கு நன்றி.

Eetti Succees Meet Stills (18)விழாவில் நாயகன் அதர்வா முரளி அவர்கள் பேசியது , நான் இந்த படத்துக்காக இரண்டு வருடங்களாக மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளேன். அந்த உழைப்பு சாதாரணமானது அல்ல. பல நாட்களாக ஈட்டி படத்தின் வெளியீடு தள்ளி கொண்டே சென்றது. படம் வெளியாக போகிறது என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த போது திடீர் என்று படம் மழை காரணமாக தள்ளி சென்றது. அதன் பின்பு மக்கள் மழையின் பிடியில் இருந்து மீண்டால் போதும் என்று நினைத்து கொண்டு இருந்தோம். அப்போது தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு படத்தை பதினோராம் தேதி வெளியிட போவதாக கூறினார். அது சரியான முடிவு என்பது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சுவைத்த பிறகு தான் எனக்கு புரிந்தது. மழையின் பிடியில் இருந்து மீண்ட மக்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக ஈட்டி அமைந்தது என்பதில் மாற்று கருத்தே இல்லை என்றார் நாயகன் அதர்வா முரளி.

விழாவில் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் அவர்கள் பேசியது , நாங்கள் எப்போதும் தரமான படங்களையே எங்களுடைய நிறுவனத்தில் தயாரித்து வருகிறோம். நாடோடிகள் படத்துக்கு பின்னர் எங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அதை போல் தான் நாயகன் அதர்வா அவர்களும் மிகப்பெரிய வெற்றியை சுவைக்க காத்துகொண்டு இருந்தார். எங்கள் நிறுவனம் மற்றும் நாயகனாகிய அதர்வா ஆகிய இருவருக்கும் இப்படம் மிகப்பெரிய பெயர் சொல்லும் படியான வெற்றியாக அமைந்திருந்தது. எல்லோரும் கூறியது போல் ஈட்டி திரைப்படத்துக்கு மாபெரும் வரவேற்ப்பை மக்கள் தந்தது போல் , பத்திரிக்கையாளர் மற்றும் மீடியா நண்பர்கள் படத்தை பற்றி துளி கூட நெகடிவ் விமர்சனம் எழுதாமல் , படத்தை மிகச்சிறந்த படமாக மட்டும் எழுதி வெற்றிக்கு வித்திட்டமைக்கு நன்றி என்று கூறி தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் அவர்கள் உரையை முடித்தார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles