.
.

.

Latest Update

ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய 2 தமிழ்த் திரைப்படங்கள்..!


unnamedஇந்தியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், புதிதாக இரண்டு தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கிறது.

இம்முறை ஆர்.வி.பிலிம்ஸுடன் இணைந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், ‘பிறை தேடிய நாட்கள்’ மற்றும் ‘எங்கிட்ட மோதாதே’ என்ற இரண்டு புதிய தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறது.

2013-ம் ஆண்டு இறுதியில் வெளியாகி பெரும் பாராட்டினைப் பெற்ற ‘விடியும் முன்’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி அதில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஆபிரஹாம் பிரபு, ‘பிறை தேடிய நாட்கள்’ திரைப்படத்தினை இயக்குகிறார். காதல் கதையான இப்படத்தில் ‘தெகிடி’ படத்தில் ஹீரோவாக நடித்த அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இன்னொரு பக்கம் அதிரடி மற்றும் ஜனரஞ்சக டைப்பில் உருவாகி வரும் ‘எங்கிட்ட மோதாதே’ படத்தினை ராமு செல்லப்பா என்கிற புதிய இயக்குநர் இயக்கி வருகிறார். இவர் ‘பசங்க’, ‘மயக்கம் என்ன’. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இந்தப் படத்தில் ‘நட்டி’ நட்ராஜ், ராதாரவி, சஞ்சிதா ஷெட்டி, ராஜாஜி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 22-ம் தேதியன்று அனகாபுத்தூர் ‘வெல்கோ’ திரையரங்கில் துவங்கியது.

புதிய திரைப்பட தயாரிப்புகள் பற்றி பேசிய ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் துணைத் தலைவரான சாகர் சத்வானி, “இத்திரைப்படங்கள் சிறந்த கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு, சரியான வியாபார முறைகளில் திட்டமிட்டு கொண்டு வரப்பட இருக்கின்றன. தென்னிந்தியாவில் எங்களது வியாபார சந்தையை இன்னமும் அதிகமாக விரிவுபடுத்தும் நோக்கத்தில் சிறந்த திரைப்படங்களை மற்றும் திறமையான திரைக்கலைஞர்களை உருவாக்கவும் எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles