.
.

.

Latest Update

உச்சத்தை அடைந்த பிரபாஸ் – பாகுபலி மேடம் டுசாட்ஸ் – பாகுபலி மெழுகு சிலை..


உச்சத்தை அடைந்த பிரபாஸ் – பாகுபலி

மேடம் டுசாட்ஸ் – பாகுபலி மெழுகு சிலை

எப்போதுமே ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் அதற்கு உருமாறுவது, அதிகமான தேதிகள் ஒதுக்குவது என்பதற்கு முன்னணி நாயகர்கள் பலரும் ஒப்புக் கொள்வதில்லை. இதன் விதிகளை உடைத்து ‘பாகுபலி’ படத்துக்காக 2 ஆண்டுகள் ஒதுக்கினார் பிரபாஸ்.

S.S.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ படத்தின் வசூல் உலக திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்தது. அமிதாப் பச்சனில் தொடங்கி அனைவருமே இப்படத்தைப் பாராட்டி புகழ்ந்தார்கள். இந்தியளவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. உலகளவில் சீனா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியாகி அங்கும் தனது முத்திரை பதித்தார் பிரபாஸ்.

பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இவர் நடித்த பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது.

2017ம் ஆண்டு பேங்காக்கில் நடக்கவுள்ள மேடம் டுசாட்ஸ் நிகழ்வுக்காக பிரபாஸ்ஸின் மெழுகு சிலை வடிவமைக்கப்படுவது அவருக்கு மேலும் ஒரு உச்சத்தை அளிப்பதாக பேங்காக் கிளஸ்டர் பார் மேர்லின் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தலைவரும், பேங்காக்கிற்கான மேடம் டுசாட்ஸ் பொது மேலாளருமான நொப்படான் பிரப்பிம்பண்ட் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பிரபாஸ் தனது தனித்துவமான திறமை, கவர்ந்திழுக்கும் வெள்ளிதிரை தோற்றம் மட்டுமன்றி தனது தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான உப்பலபட்டி சூர்ய நாராயண ராஜு அவர்களை போன்றும், பிரபல நடிகரும், அரசியல் பிரமுகரான தனது மாமா கிரிஷ்ணம் ராஜீ ஆகியோரை தொடர்ந்து சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

உலகளவில் இந்தியாவின் முன்றாம் அதிக வசூல் ஈட்டப்பட்ட படமும், இந்தியாவின் முதல் அதிக வசூல் ஈட்டப்பட்ட படம் பாகுபலி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இத்தகைய பெரும் திரைப்புரட்சியினால் நடிகர் பிரபாஸ் கூகுளில் தொடர்ந்து அதிகளவில் தேடப்பட்ட நடிகராக திகழ்கிறார். மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பிரபாஸ்ஸின் மெழுகு சிலையை வடிக்குமாறு விருப்பம் தெரிவித்திருந்தனர். மகாத்மா காந்தி, தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு பிரபாஸ்ஸின் பாகுபலி கதாபாத்திரம் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் மெழுகு சிலை வரிசையில் அமையவுள்ளது” என்று கூறினார்.

இச்சிலைவடிவமைப்பிற்காக ஹைதிராபாத்தில் மேடம் டுசாட்ஸ் குழு நடிகர் பிரபாஸ்ஸின் பல்வேறு விதமான அளவிடுகள் எடுக்கும் வகையில் 350க்கும் மேற்பட்ட புகைபடங்களை எடுத்துள்ளனர். எள் அளவிலும் எந்த வித வித்தியாசமும் தெரியாத அளிவிற்கு சிறந்த முறையில் அனைத்து அளவிடுகளை முறையே எடுத்து மெழுகு சிலை வடிவமைக்கவுள்ளனர். உலகளவில் பெரிதும் பாராட்டப்பட்டு பல தரப்பட்ட ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட பிரபாஸ் நடித்த பாகுபலி கதாபாத்திரம் மெழுகு சிலை உருவாவது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ் இந்நிகழ்வு பற்றி கூறுகையில், “மேடம் டுசாட்ஸ் என்னை தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இதற்கு காரணமாய் இருந்த எனது ரசிகர்களின் அளவில்லா அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி. பாகுபலியில் என்னை நடிக்க வைத்த எனது குரு S.S.ராஜமெளலி அவர்களுக்கும் இத்தருணத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம், அனைத்து ரசிகர்களும் தோளோடு தோளாக நின்று உலகளவில் இந்தியாவின் திரைப்பட மகிமையை உணர வைத்த S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி மெழுகு சிலையுடன் “செல்பி” எடுத்துக்கொள்ளலாம். “முவி ரூம்” தளத்தில் பாகுபலி சிலையுடன் ஸ்பைடர் மேன், உள்வரின், ஜேம்ஸ் பாண்டு, கேப்டன் அமேரிக்கா உள்ளிட்ட சிலைகள் அமைக்கப்படவுள்ளது. மேடம் டுசாட்ஸ் பேங்காக் சியம் டிஸ்கவரியில் உள்ள நான்காம் தளத்தில் அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த உயரத்தை பிரபாஸ் அடைய பல்வேறு சிக்கல்கள், சர்ச்சைகள் என எது வந்தாலும் அவற்றை தகர்த்து எறிந்து இந்த உயரத்தை எட்டியிருக்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் இந்த பெருமை அவரை திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சொல்லும் என்பது திரையுலகினரின் கணிப்பு!

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles