ஜாய் ஸ்டார் enterprises நிறுவனத்தினர் வெளி வர இருக்கும் ஆகம், முடிவடையும் தருவாயில் உள்ள கரம் ஆகிய படங்களை தொடர்ந்து தங்களது மூன்றாவது படத் தயாரிப்பான ‘டிங் டாங்’ என்ற தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராக உள்ள புதிய படத்தின் பூஜையை சென்னையில் நடத்தினர்.
‘ டிங் டாங் ‘ ஒரு முற்றிலும் புதுமையான , உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்து உள்ள த்ரில்லர் கதை. ஜினிஷ் என்ற புதிய இயக்குனரை இந்தப் படத்தில் அறிமுகம் செய்கிறோம். தெளிவான கதை, நீரோட்டம் போன்ற திரைக்கதை, என்று எதிர் காலத்தில் ஒரு பெரிய இயக்குனராக வருவார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் ஜினிஷ் .விடியும் முன், ஆகம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சரண் \டிங் டாங்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். சிலப் படங்களுக்கு ஒளிப்பதிவே பிரதானமாக கதை சொல்லும் , அந்த வகையில் சரணின் ஒளிப்பதிவு படத்துக்கு மிக பெரிய பலம். இந்தப் படத்தின் நாயகன் , நாயகி , மற்றும் கதாப்பாத்திரங்களின் தேர்வு, இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.வருகின்ற ஏப்ரல் மாதம் கதைக்கு தேவை படும் மலை பிரதேச ஸ்தலங்களிலும், சென்னையிலும் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடக்க உள்ளது ‘ என இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கோடீஸ்வர ராஜு, மற்றும் ஹேமா ராஜு ஆகியோர் கூறி உள்ளனர்.