தாருநிஷா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஷ் அம்பேத்கார் வழங்க A .சங்கரபத்மா தயாரிக்கும் “ அச்சாரம் “
இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராமன், முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக பூனம்கவுர், ஐஸ்வர்யா தத்தா இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் ஞானதேஷ், ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் குடும்பத்துடன் பார்க்கிற மாதிரியான கதையம்சம் கொண்டது. கணேஷ் வெங்கட்ராமன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானதேஷ் அம்பேத்கார் பூனம் கவூருக்கு அப்பாவாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் கதை தஞ்சாவூர் அருகில் மேலஉளூர் என்ற ஊரில் கான்ஸ்டபிள் நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த படத்தில் மெசேஜ் இருக்கும். ஒரு பிரிட்டீஷ் கல்லறையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினோம். அந்த கல்லறையில் பிரிட்டீஷ் காரர்களை தவிர வேறு யாரையும் உள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள். படம் இம்மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது என்றார் இயக்குனர்.