.
.

.

Latest Update

உனக்கென்ன வேணும் சொல்லு – நடிகை ஜாக்குலின்


தொலை காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. Jaqlen (3)தனியார் தொலை காட்சி ஒன்றில் நடனம் சம்மந்த பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு.இணைய தளங்களில் டீசர் மூலம் பெரும் வரவேற்ப்பு பெற்று உள்ள ‘ உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் கதாநாயகியாக அறிமுக மாக உள்ளார் ஜாக்குலின்.
”இந்த படத்தின் கதா நாயகி தேர்வு சற்றுக் கடினமாக தான் இருந்தது.வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் என் கதையின் நாயகி. எதை பற்றியும் கவலை படாத ஒரு இளம் பெண் , பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும் , பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளம் மனைவி , உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே சவால் விடும் பாத்திர படைப்பு இது.இதை சிறப்பாக செய்த ஜாக்குலினுக்கு நிச்சயம் நல்ல நடிகை என பெயர் கிட்டும்’ என கூறினார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமிலிங்கம்.

கதாநாயகி ஜாக்குலின் கூறும் போது ‘ என்னால் இப்பவும் நம்ப முடிய வில்லை.நல்ல கதை , நல்ல திட்டமிடுதல் Jaqlen (6)என்றாலும் இந்தக் காலக் கட்டத்தில் படம் எடுப்பதை விட படம் வெளி ஆவது தான் கடினம் என்று எல்ல்லோரும் அச்சமுறுத்திய வேளையில் படம் பார்த்த உடனே அதை வாங்கி வெளியிடும் தேதியை குறித்த Auraa cinemaas மகேஷுக்கு மிக்க நன்றி.இந்த தருணத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் கூட இரவில் எனக்கு எங்கோ தொலை தூரத்தில் குழந்தை ஒன்று அழுவதை போல் காதில் கேட்கும் . யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவும் எனக்கு அச்சம். பத்திரிகைகளில் மற்ற நடிகைகள் பேய் படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளும் போது , அதை கிண்டலடித்தவள் நான். இப்போது எனக்கே இந்த அனுபவமா என்று சிந்திக்க தொடங்கிய போது எனக்கு தோன்றியது என்னெவென்றால், முதல் படம் என்பதால் இரவும் பகலும் முழுக்க முழுக்க இந்த படத்தைப் பற்றிய சிந்தனையில் இருப்பதால் தான் இப்படி நடக்கிறது என்று. இது கூட பரவாயில்லை ,இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்கு குழந்தைகளின் மீது அலாதி பிரியம் வர ஆரம்பித்தது . தாய்மை உணர்வும் மேலோங்க துவங்கியது . என் சகோதரியின் குழந்தையை இப்போது முன்பை விட கண்ணும் கருத்துமாக கவனிக்க ஆரம்பித்தேன்.படத்தில் இரண்டு வெவ்வேறுக் கால கட்டத்தில் தாயாக நடித்த அந்த Jaqlen (2)உணர்வு என்னுள் மிஞ்சி கிடப்பதை நான் உணர ஆரம்பித்தேன்.
நடன கலைகளில் ஆர்வம் கொண்டுள்ள எனக்கு நடிக்கும் போது அந்த உணர்வை புரிந்துக் கொள்ளவும் , நடிக்கவும் பெரிதும் உதவியது.சவாலான பாத்திரங்களில் சோபிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது அதற்க்கு ஏற்றார் போலவே சமீபத்திய வரவுகளான புதிய இயக்குனர்கள் கதா நாயகியை வெறும் காட்சி பொருளாக பயன் படுத்துவது இல்லை , இது என்னை போன்ற நடிகைகளுக்கு பெரும் ஆசிர்வாதமாகும். ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் டீசெர் வெளிவந்த நாளில் இருந்து எனக்கும் , என் சக நடிக நடிகையருக்கும், எங்கள் இயக்குனர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் கிடைத்து வரும் வரவேற்ப்பு பிரமாதம். படம் வெளி வந்த பின்னர் இதுக் கூடும் என்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கு.என து நடிகை ஆக வேண்டும் என்ற கனவை , மிக பிரமாதமான படத்தின் மூலம் நிறைவேற்றிய இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சானுக்கும் மனமார்ந்த நன்றி’ என்ற தெள்ள தெளிவான தமிழில் கூறி விடை பெற்றார் ஜாக்குலின்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )