“சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ” படத்தின் இயக்குனர் மருது பாண்டியன் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா பேரில் ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் பாபி சிம்ஹா தன்னையும் தன் படத்தயாரிப்பாளரையும் இப் படத்தின் டப்பிங் பேச அழைத்த பொது பாபி 25,00,000 லட்சம் சம்பளம் குடுக்கணும் இல்லைனா இந்த படத்தின் லாபத்தில் பங்கு குடுக்கணும் என்று மிரட்டியதாக சொன்னார்.
ஆனால் நேற்று நடந்த உறுமீன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இதை பற்றி கேட்டதற்கு ஆவேசம் அடைந்த பாபி எங்க இயக்குனர் மருது பாண்டியனை இங்க வந்து பேச சொல்லுங்க நான் அப்படி கேட்டேன்னு சொல்ல சொல்லுங்கள் முதலில் அவர் அந்த படத்தை குறும்படம் என்று தான் என்னை நடிக்க வைத்தார். அந்த படத்தில் நாயகி யாருன்னு சொல்ல சொல்லுங்க என்னை ஏமாற்றி நடிக்க வைத்தது அவர். என்னை வைத்து விளம்பரம் தேடுவது மருது பாண்டியன் என்று ஆவேசப்பட்டார். என்னுடன் நேரில் பேச வர முடியுமா இயக்குனர் மருது பாண்டியன் என்று சவால் விடுறாரு பாபி.