.
.

.

Latest Update

‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே’ – பட்டையைக் கிளப்பும் புதிய காதல் பாட்டு!


Raja Mandhiri Movie Stills (4)காளி வெங்கட் நடித்திருக்கும், இளமைத் ததும்பும் இப்பாடலின் டீசரை ‘ராஜா மந்திரி’ படக்குழுவினர் முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறார்கள்.

’ராஜா மந்திரி’ படத்தின் டைட்டிலே, அதன் கதையின் களத்தை குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது. அண்ணன் தம்பி உறவு ஒருபக்கமும், அவர்களுக்கு உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. படம் பார்க்கும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடிய ஒரு முழு பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக அமைந்திருப்பதை, அதன் விளம்பர காட்சிகளைப் பார்த்தாலே புரியும். காதலும், அதன் கலாட்டாகளும் கலந்து இருந்தாலும், அண்ணன் தம்பி உறவுக்குள் இருக்கும் அற்புதமான உணர்வுகளுக்கும், சென்டிமெண்ட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது கனவு தேவதையை நினைத்து, உற்சாகமாகி காளி வெங்கட் பாடும் பாடலாக ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே’ பாடம் அமைந்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் அருமையான இசையில், ஏ.சி.எஸ். ரவிசந்திரன் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.

Raja Mandhiri Movie Stills (20)இயக்குநர் சுசீந்திரனிடம், உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவமுள்ள உஷா கிருஷ்ணன் ‘ராஜா மந்திரி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் கலையரசன், காளி வெங்கட், ஷாலின் ஸோயா, வைஷாலி மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

’எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பேனரில் வி.மதியழகன் மற்றும் ஆர். ரம்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இவர்களோடு கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகியலான ஒளிப்பதிவுக்குப் பெயர் பெற்ற பிஜி முத்தையா தனது பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் மூலம் இணைதயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ராஜா மந்திரி’ படத்தை, அவ்ரா சினிமாஸ் வருகிற ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரையிடுகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles