ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அடிதடி வெட்டுகுத்து, இசைபின்னணி, காதல், காமெடி என ஒவொருவரும் ஒரு பாணியை நூல் பிடித்தாற் போல் பிடித்து வெற்றி வாகை சூடியவர்கள் பலர் !
அதில் குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர்.
அவரிடம் பேசினோம்….
· குடும்பக் கதைகள் மட்டும்தான் உங்கள் பாலிசியா ?
நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம்..குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம்! எதிர்கால சிந்தனை கூட கும்பதிற்காக மட்டுமே யோசிக்கிறோம்.
ஓவொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என்படங்களை வெற்றி பெற செய்தார்கள்.
· இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் சரவண பொய்கை பற்றி ?
இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதைதான் “ சரவண பொய்கை “
இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் விதமாக எடுத்திருக்கிறோம்!
இதுவரை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக நான் இயக்கிய 17 படங்களுக்குமே “U “ சர்டிபிகேட் படங்கள் தான்.
சரவண பொய்கை படத்திற்கு ஒரு கட் கூட இல்லாமல் U சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.
கார்ல்மார்க்ஸ், அருந்ததி, விவேக், கருணாஸ், கோவைசரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் காதல், காமெடி படமாக உருவாகி உள்ளது.
விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என்றார் வி.சேகர்.