ஏப்ரல் 28 முதல் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு” படத்தின் டீசர்
லைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு”
டார்லிங் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணையும் இரண்டாவது படம் இது. திரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிக்கு பிறகு நடிகை ஆனந்தியுடன் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்து நடிக்கிறார்.
அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படும் இப்படத்தின் முதல் முன்னோட்டமான டீசர் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. “எனக்கு இன்னோரு பேர் இருக்கு” படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துயுள்ளது.
மேலும் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு” படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கவுள்ளது.