ஏ.பி.ஜெ அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவுதின ஆண்ட்ராய்டு செயலி வெளியிடு.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு “சரித்திரமாக” இருக்க வேண்டும் என்ற பொன்னான வார்த்தைகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம். அப்துல் கலாம் மறைந்து இன்றுடன் (27.07.2016) ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
சரித்திர நாயகன் அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும் புதுக்கோட்டை ஜி டெக் எஜுகேசனும் இணைந்து சரித்திர நாயகன் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் நினைவுதின ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டது.
இந்த விழாவில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.D. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஜி டெக் P வினோத்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் Rtn.ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் கலந்துகொண்டு ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட ரோட்டரி துணை ஆளுநர் Rtn. X வில்சன் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.
இந்த ஆண்ட்ராய்டு செயலியில் அப்துல் கலாம் வாழ்க்கை குறிப்பு, அவரது சொற்பொழிவு காணொளிகள், நம் அனைவரது மனங்களில் இன்றும் நிற்கும் பொன்மொழிகள், ஆண்ட்ராய்டு தொலைபேசியின் முகப்பில் வால்பேப்பராக அமைக்கும் வசதி, அப்துல் கலாம் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளும் வசதி போன்ற இந்த செயலியில் அனைத்து செயல்பாடுகளையும் ஜி டெக் நிறுவனர் Rtn.M கோபிநாத் எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் சென்ட்ரல் ரோட்டரி சங்க முன்னால் தலைவர்கள் ஜெய் பார்த்தீபன், M பார்த்தீபன், GSM சிவாஜி, சங்க உறுப்பினர்கள் p மதிவாணன், அகிலா சுரேஷ், சோமசுந்தரம், தனபால், ஜி டெக் J மணிகண்டன், ஜெரோம் ஆகியோர் கலந்துகொண்டனர். செயலாளர் Rnt.K.ரவி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
அப்துல் கலாம் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்ய >> https://play.google.com/store/apps/details?id=com.abdulkalamquotestamil.apjabdulkalamwallpapers
(or) www.gtechlab.com