.
.

.

Latest Update

ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ள “டார்லிங் 2”


darling dirctorG.V. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படம் விமர்சகர்கள் இடையேயும் , ரசிகர்கள் இடையேயும் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது என்றால் மிகையாகது. அது மட்டும் அல்ல இசை அமைப்பாளராக இருந்த G.V.பிரகாஷ்குமார்க்கு ஒரு நல்ல நடிகன் என்ற அந்தஸ்தும் கிடைத்தது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து ஞானவேல் ராஜா மீண்டும் தயாரிக்கும் படம் டார்லிங் 2. இந்த படத்தில் மெட்ராஸ் புகழ் கலையரசன், காளி வெங்கட், முனிஷ்காந்த், மெட்ராஸ் புகழ் ஜானி, இவர்களுடன் புதுமுகங்களாக ரமீஸ் மற்றும் மாயா அறிமுகமாகிறார்கள். இந்த படத்துக்கு இசையமைப்ப்பளராக அறிமுக இசையமைப்பாளர் ரதன் மற்றும் அறிமுக ஒளிபதிவாளர் விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில் தான் இந்த கதை உருவாக்கபட்டது என்று இயக்குனர் கூறினார். இயக்குனரும் அவர்கள் நண்பர்களும் ஒரு சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட அனுபவம் தான் இந்த படத்தின் கதை, ‘ சின்ன பட்ஜெட்ல தான் இந்த படத்தை ஆரம்பித்தோம். சின்னப் படம் என்றாலும் ஞான வேல் ராஜ சாரின் கை பட்டதும் பெரிய படம் ஆகி போனது.இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தனர் படம் முழுக்க இரவு நேரத்தில் தான் நடந்தது. அதுவும் ஊட்டி குளிரில் படம் எடுத்தோம்,குளிரில் நடுங்க நடுங்க படமாக்கப் பட்ட இந்தப் படம் இந்த வெயில் காலத்தில் ரசிகர்களை பேய் பயத்துடன் நடுங்க நடுங்க படம் பார்க்க வைக்கும்,வரும் ஏப்ரல் மதம் 1ம தேதி இந்த படம் ரிலீஸ் என்றும் கூறினார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles