.
.

.

Latest Update

ஒலிம்பிக்கில் எங்கள் தங்க பெண் P.V. சிந்து வெற்றியே பெற்றுள்ளார் – விஜயபிரபாகரன் பேட்டி.


ஒலிம்பிக்கில் எங்கள் தங்க பெண் P.V. சிந்து வெற்றியே பெற்றுள்ளார் – விஜயபிரபாகரன் பேட்டி

இந்திய அளவில் ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டனில் கலந்துகொண்ட P V சிந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதைப்பற்றி சென்னை ஸ்மாஷ்ர்ஸ் உரிமையாளர் விஜய பிரபாகரன் கூறியதாவது,

கடந்த வருடம் சிந்து எங்கள் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்தார்,தற்பொழுது சிந்து ஒலிம்பிக்கில் இந்திய அளவில் மகளிர் பேட்மின்டனில் கலந்துகொண்டு விளையாடி அதில் அவர் தங்கத்தைதான் தவறவிட்டாரே தவிர தோல்வியடையவில்லை என்றும், 2012 ல் சாய்னா நேவால் வெண்கலப்பதக்கத்தை மட்டுமே வென்றார். ஆனால் எங்கள் தங்க பெண் சிந்து தனது 21 வது வயதிலேயே வெள்ளி பதக்கத்தை வென்றது எங்களுக்கு பெருமைக்குரிய செய்தியாகும். தோனி எப்படி சென்னை சூப்பர் கிங்ஸில் பங்குபெற்று பிறகு உலகக்கோப்பையை வென்றாரோ அதேபோன்று சிந்துவும் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார் என்பதை பெருமையாக எடுத்து கொள்வோம் என்கிறார் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகர் மற்றும் தே மு தி க நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகனுமான விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles