கடலூரில் துவங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின்அடுத்த கட்ட வெள்ள நிவாரணம். #Superstar Rajinikanth’s flood relief reaches next stage in Cuddalore.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தேவையான நிவாரண பொருட்களை தலைவர் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் அளித்து வந்தது. சென்னை மற்றும் புற நகர் பகுதிகளிக்கு நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை முதல் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், போர்வை, பாய், துணிமணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், மற்றும் பிளீச்சிங் பவுடர், பினாயில் கொடுக்கப்பட்டது, இன்று காலை 8 மணியளவில் நிவாரண பொருட்கள் வழங்குவதை தலைவர் ரஜினிகாந்தின் நண்பர் திரு, சுதாகர் அவர்கள் துவங்கி வைத்தார்.