நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிறுபாண்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா மதுரை ஐகோர்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் மேலும் பல சிறுபான்மை அமைப்பினரும் விஷாலிடம் நேரடியாகவும் , பிறர்மனம் புண்படும்படியாக உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர். அதனை தொடர்ந்து விஷால் தன்னிச்சையாகவே முன்வந்து திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் கதகளியிலுள்ள வில்லன் விஷாலிடம் பேசும் 2௦ நொடி நீளமுள்ள அந்த காட்சி நேற்று முதல் தியேட்டரில் நீக்கப்பட்டுவிட்டது. இத்துடன் நீக்கப்பட்டதற்கான தணிக்கை அதிகாரிகளின் சான்றிதழையும் இணைத்துள்ளோம்.