.
.

.

Latest Update

கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற அதிரடி சண்டைக்காட்சி ..


கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற
அதிரடி சண்டைக்காட்சி
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன்
இசை – ஹிப் ஹாப் தமிழா
பாடல்கள் – நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா
வசனம் – பசும்பொன் ஜோதி
எடிட்டிங் – ஆர்.கே.செல்வா
ஸ்டன்ட் – கனல்கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ்
கலை – உமேஷ்குமார்
நடனம் – தினேஷ், ஷோபி
தயாரிப்பு மேற்பார்வை – பிரேம் ஆனந்த்
தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்
கதை, திரைக்கதை, இயக்கம் – சுராஜ்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது….
இந்த படத்தில் இடம்பெறும் சேஸிங் காட்சி ஒன்று சமீபத்தில் ஈ.சி.ஆர் ரோட்டில் படமாக்கப்பட்டது. வில்லன்கள் ஜெகபதிபாபு, தருண் அரோரா ஆகியோரை விஷால் துரத்தி பிடிக்கும் கார் சேஸிங் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் ஏழு நாட்கள் 12 கேமராக்கள் கொண்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டது.
பைக் சேஸிங்கில் தேர்ச்சி பெற்ற ஆறு கலைஞர்களைக் கொண்டு திரில்லிங்காக படமாக்கினோம். விறு விறுப்பான திரைக்கதையில் உருவான கத்திசண்டை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சுராஜ்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles