தமிழ் சினிமா எத்தனையோ வன்முறைகளைப் பார்த்துள்ளது;எத்தனையோ ஆயுதங்களைக் கண்டுள்ளது. கத்தி இல்லை; சுத்திஇல்லை; துப்பாக்கியும் இல்லை. கண்ணால் பார்க்கும்படி வேறு ஆயுதமும் இல்லாமல், கண்ணுக்குத்தெரியாத ஆயுதத்தைக்கொண்டு வன்முறை,கொலை செய்வதைக் கண்டதுண்டா?
அப்படி ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்தி சைக்கோ ஒருவன் பல கொலைகளைச் செய்கிறான்.
அப்படிப்பட்ட ஆயுதத்தைக் காட்டுகிற படம்தான் ‘நெடுமன் ‘. ஸ்ரீ நாகராஜா சர்ப்ப எக்ஷி பிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை ஆர்,என்.ஸ்ரீஜா, ஆதி ஆனந்த் தயாரித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்
நாகமானிசி.இவர் பல விளம்பரப் படங்கள் இயக்கியவர்.
அப்படி என்னதான் ஆயுதம்? என்று இயக்குநரிடம் கேட்ட போது
”நம் காதுகள் சாதாரணமாக 80 டெஸிபல் ஒலி அளவையே தாங்கும் திறன் கொண்டவை.
எப்படியும் அதிகமாகப்போனால் 120-130 டெஸிபலைத் தாண்டித் தாங்க முடியாது. அதையும் தாண்டி வரும் பேரொலிகள் செவிப்பறையைக் கிழிக்கும்.அடுத்ததாக ரத்தக்குழாய்களை வெடிக்கச்செய்து விடும். பிறகு மரணம்தான்.இப்படி பேரொலி, பேரோசை எழுப்பி ஒரு சைக்கோ கொலை செய்கிறான்.இப்படிப்பட்ட சைக்கோ வெளிநாடுகளில் இருந்ததுண்டு.
இப்படி சத்தம் மூலம் கொலை செய்யும் ஒரு மன நோயாளியை சத்தமின்றிப் பாம்பு போலப் பின் தொடர்கிறான் ஒரு வலிமையான போலீஸ்காரன்.அவன்தான் நெடுமன்.இவர்களுடன் இன்னொரு அரசியல்வாதிக்கும் தொடர்பு உள்ளது..இம்மூவரையும் ஆட்டி வைக்க ஒரு பேயும் படத்தில் உண்டு படத்தின் இந்த மூன்று பாத்திரங்களுக்குள் வெவ்வேறு காலச்சூழ்நிலையில் நடக்கும் போராட்டம், பாசம், உக்கிரமான குணம் ஆகியவற்றின் வெளிப்பாடுகள் திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டுபவை..
ஓசை மூலம் கொலை செய்பவனை ஓசையின்றி பிடிக்க முயலும் போலீசின் துரத்தல் சுவாரஸ்யம்.அந்த மூவரையும் ஆசையோடு ஆட்டி வைக்கும் பேயின் ஆட்டம் திகிலானது.பேய்க்கும் அந்த மூவருக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் சஸ்பென்ஸின் பின்னணி.இப்படி எல்லாமும் இணைந்து கலக்கும் பரபரப்பான படம்தான் நெடுமன்.” என்றவரிடம்
நெடுமன் என்றால் என்ன? எனக்கேட்ட போது,
‘’இந்த நெடுமன் என்பது ராஜநாகத்தை விட கொடிய விஷமுள்ள பாம்பு என அறியப் பட்டுள்ளது.பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு இப்பெயரை வைத்தோம்.”என்றார்.
நெடுமன் பாத்திரத்தில் இயக்குநர் நாகமானிசி நடித்திருக்கிறார்.இந்திய துபாய் உலக அழகியான ஜோன்ஸ்னா தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.இரண்டாவது கதாநாயகியாக தேவசூர்யா நடித்துள்ளார்.காதல்தண்டபாணி நடித்து டப்பிங் பேசிய கடைசிப் படம் நெடுமன்.
இவர்களுடன் ‘பானாகாத்தாடி’ உதயராஜ், ஏசியாநெட் சேனலின் ஜோயிஜான் ஆண்டனி, ஆதிஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நம்நாட்டில் கன்னியாகுமரி ,நாகர்கோவில், எர்ணாகுளம், மூணாறு ஆகிய பகுதிகளில் மட்டுமல்ல வெளிநாடான துபாயிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் த்ரில்லர் படம் எனலாம்.
இசை : மிதுன் ஈஸ்வர், ஸ்டண்ட் : மிரட்டல் செல்வா, நடனம் : சிவஷங்கர், அஜய் சிவஷங்கர், ராபர்ட், ஜோதிமதி.
இறுதிக் கட்டப்பணிகளில் மெருகேறி வருகிற இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் .