மெய்நிகரி கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்துவின் பத்தாவது புத்தகம் – மூன்றாவது நாவல்
இது ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழும் ரியாலிட்டி ஷோ பற்றிய கதை
செப்டம்பர் இறுதியில் கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.
www.meinigari.com என்ற அறிமுகத்தளம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதைக்களமும், கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
முழு நாவலும் ஒரு படத்தொகுப்பாளரின் பார்வையால் சொல்லப்பட்டிருப்பதால் நூதன முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது
நாவல் வெளியிடுவதற்கு முன் டீசர் போஸ்டர், வெப்சைட் என்று சமூக வலைத்தளங்களில் மெய்நிகரி பரவிக்கொண்டிருக்கிறது.
காட்சி ஊடகம் பற்றிய ஒரு கலகலப்பான விவாதமாக இந்த நாவல் இருக்கும் என்று கபிலன்வைரமுத்து சொல்கிறார்.
எழுத்தாளராகவும், திரைப்படப் பாடலாசிரயராகவும் இருக்கும் கபிலன்வைரமுத்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.