விக்ரம் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் ‘ஐ’ படத்தில், 3 பாடல்களை எழுதியிருக்கிறார், பாடல் ஆசிரியர் கபிலன். இந்த படத்துக்காக ஒரு பாடலை விமானத்திலும், மலைவாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் டைரக்டர் ஷங்கருடன் அமர்ந்து அவர் எழுதியுள்ளார்.
”டைரக்டர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில், பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம்பெறுகிறது என்பதை சுருக்கமாக கூறிவிடுவார். பிரகு அந்த பாடல் எங்கெல்லாம் படமாக்கப்பட இருக்கிறது, கதாநாயகன்&கதாநாயகி எந்தவிதமான உடைகள் அணிந்திருப்பார்கள்? என்பதை ‘இண்டர்நெட்’ மூலம் விளக்குவார்.
ஒரு பாடலை எழுதுவதற்காக நாங்கள் கொடைக்கானலுக்கு புறப்பட்டோம். அந்த பாடலை மிக உயர்ந்த இடத்தில் வைத்துதான் எழுத வேண்டும் என்று அவர் விரும்பினார். விமானத்தில் மதுரை செல்வதற்குள் பாடலை எழுத ஆரம்பித்து விட்டோம். இறங்குவதற்குள் பல்லவி தயாராகி விட்டது.
பிறகு காரில் கொடைக்கானல் மலை உச்சிக்கு சென்று தங்கினோம். ”உயர்வான பாடல் இது. உச்சியில் அமர்ந்துதசன் எழுத வேண்டும்” என்று ஷங்கர் சிரித்துக்கொண்டே கூறினார்.
அந்த பாடல் வரிகள் ஏ.ஆர்.ரகுமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சிறப்பான பாடலாக உருமாறி வந்தது. ‘ஐ’ படத்துக்காக நான் எழுதிய இன்னொரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.”