.
.

.

Latest Update

கமல் ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் “மீன் குழம்பும் மண்பானையும்”


kamal hassanநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கிறார். உலகநாயகன் கமல் ஹாசன், இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் இணைந்து நடிக்கும் காட்சி இன்று படமாக்கப் பட்டுவருகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, M.S.பாஸ்கர், சந்தானபாரதி, R.S.சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை J.லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும் கலையை M.பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை S.ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை RS. சிவாஜியும் கவனிக்கிறார்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles