சமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தை Octospider production சார்பில் தயாரித்து இருப்பவர்கள் எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர். புதிய இயக்குனர் மணிஷர்மா இயக்கத்தில் உருவான ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் வெளயிட்டார். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாகா சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானது. திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று , ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக உச்சரிக்கும் டாக்டர் கமல்ஹாசன் ,’பயம் ஒரு பயணம் ‘ படக் குழுவினரை பற்றி கூறியதாவது ‘டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர்.ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது.’உன்னை போல் ஒருவன் ‘ படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான் ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தின் ஒரு சிலக் காட்சிகளை காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘ பயம் ஒரு பயணம்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ எனக் கூறினார்.