.
.

.

Latest Update

கலையரசனுக்கு இது ’டபுள் கொண்டாட்ட ஏப்ரல் மாதம்’!


Darling 2 Movie Stills (3)‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்.

காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’மற்றும் ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன. உற்சாகமும், திறமையும் இருந்தாலும், ஒரேயொரு படம் மூலம் சில நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், புதிய அடையாளத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாள் கலை தாய். கலை தாயின் அந்த ஆசீர்வாதம் பெற்ற இன்றைய தலைமுறை நடிகர்களில் முக்கியமான ஒருவராக, கலையரசன் திகழ்கிறார்.

டாப் கியரில் இருக்கும் கலையரசனின், சினிமா பயணத்தில் அவரது கால்ஷீட் இப்போது ஃபுல். அவர் நடிக்கும் படங்களில் மிகவும் முக்கியமானது, சூப்பர் ஸ்டாரின்‘கபாலி’. இப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகர் தன் வாழ்வில் ஒரு விடுமுறை கொண்டாட்டத்தின் போது பார்த்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதிய கதையை கொண்டு இயக்கி யிருக்கும் படம்‘டார்லிங்–2’. இப்படம் இம்மாதம் ஏப்ரல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Darling 2 Movie Stills (1)’டார்லிங்–2’ படத்தைப் பொறுத்தவரை ஒரு அறிமுக இயக்குநர் இயக்கிருந்தாலும், இப்படத்தின் ஒட்டுமொத்த யூனிட்டை அவர் கையாண்ட விதமும், நுணுக்கமாக படத்தை உருவாக்கியதும் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இப்பட ஷூட்டிங்கின் போது பெரும்பாலான நாட்கள் ஆந்தைகளைப் போல இரவு முழுவதும் முழித்திருந்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பகல் முழுவதும் தூக்கியிருக்கிறது ஒட்டுமொத்த டீமும். இந்த டிமாண்ட்க்கு காரணம் கதை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டிருக்கும் ‘டார்லிங் -2’ படத்தைப் பற்றி கேட்டதுமே, தமிழ் திரையுலகில் ஒரு படத்தை எப்படி வெற்றி பெற வைத்து ஹிட்டாக்குவது என்பதில் தனது அசாத்தியமான திட்டமிடல்களால் புகழ்பெற்ற சூப்பர் தயாரிப்பாளர் திரு. ஞானவேல் ராஜா, தனது பேனரில் வெளியிட இருக்கிறார். இதன் மூலம் இப்படத்தின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையே முதல் வெற்றியாக அமைந்திருக்கிறது.

இது தொடர்பாகவும், ‘டார்லிங் -2’ படம் பற்றியும் கலையரசன் கூறுகையில், “டார்லிங்-2’ படம் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக வெற்றிப் பெறும். இந்த வெற்றி என்னுடைய சினிமா கேரியரில் ஒரு நடிகராக என்னை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் நம்புகிறேன்” என்று உற்சாகமாகிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles