படம் பார்த்தவர்களால் மிக மிக சுவாரசியமான படம் என பாராட்ட படும் ‘ வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையான முறையில் நடைப்பெற்றது.தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலை புலி’ தாணு முன்னிலையில் இயக்குனர்கள் கௌதம் மேனனும், மோகன் ராஜாவும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தங்களது துறையில் ஜாம்பாவான்கள் ஆக திகழும் தாணு சாரும் ,இயக்குனர் கௌதம்மேனன் மற்றும் ராஜா சாரும் வந்திருந்து வாழ்த்தியது அவர்களது பெருந்தன்மையை காட்டுகிறது.இசை அமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக சிறப்பாக இசை அமைத்து உள்ளார்.பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து படத்தின் மூலக் கதையின் தன்மைக்கு ஏற்ப பாடல்கள் இயற்றி உள்ளார்.கலை புலி நிறுவனம் சார்பில் வெளி வர போகும் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ நிச்சயம் எங்களுக்கு வெற்றிப் படமாக இருக்கும்’ எனக் கூறினார் தயாரிப்பாளர் தேவன்ஷு ஆர்யா..