M.G.K. MOVIE MAKER சார்பில் S.ரவிசங்கர் தயாரிக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”.இந்த திரைப்படத்தை தி.கிருஷ்ணசாமி இயக்கி இருக்கிறார் சர்வதேச சிலை கடத்தலை மையமாக வைத்து புதிய கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது இதன் திரைக்கதை.ஒரு சர்வதேச சிலை கடத்தல்காரன் எப்படி தனது புத்திசாலித்தனத்தை உபயோகித்து தமிழ்நாட்டில் பழம்பெருமை வாய்ந்த பலகோடி மதிப்புள்ள சிலையை கடத்துகிறான் என்பதை இயல்பாக சித்தரித்துள்ளது இந்த திரைப்படம்.இந்த திரைப்படத்தை கண்ட தணிக்கை குழுவினர் இதற்கு “U” சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் எந்த இடத்திலும் கட் எதுவும் கொடுக்கவில்லை.திரைப்படம் மிகவும் ஆழமாக செதுக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தனர். விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது “களவு தொழிற்சாலை”.