.
.

.

Latest Update

‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் உள்ளங்களை வென்றுள்ளார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்..


‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் உள்ளங்களை வென்றுள்ளார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்

‘கவலை வேண்டாம்’ என்ற தலைப்பை உச்சரிக்கும் போதே நமக்குள் ஒருவித நம்பிக்கையான ஆற்றலும், உற்சாகமும் குடிக் கொள்கிறது…தலைப்பிலேயே இவ்வளவு உற்சாகம் இருக்கிறது என்றால், முழு படத்தில் எந்த அளவிற்கு இருக்கும்… ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வரும் கவலை வேண்டாம் படத்தை இயக்கி இருக்கிறார் ‘யாமிருக்க பயமேன்’ புகழ் டீகே…இன்றைய காலத்திற்கேற்ற காதல் கலந்த சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் கவலை வேண்டாம் படத்தில் ஜீவா மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியான கவலை வேண்டாம் படத்தின் இரண்டு டீசர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற, தற்போது வெளியாகி இருக்கும் இந்த படத்தின் பாடல்களும், இசை பிரியர்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது….தென்றல் போல் மனதை வருடும் இசையையும், கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும் தாளத்தையும் ஒருங்கிணைத்து, அற்புதமான பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்… இவருடைய முதல் படமான ‘கோ 2’ படத்தில் ‘கோகிலா’ மற்றும் ‘கண்ணம்மா’ பாடல்கள் ரசிகர்களின் பாராட்டுகளை பெருமளவில் பெற்றது….தற்போது அதேபோல் ‘கவலை வேண்டாம்’ படத்தில் அர்மான் மாலிக் பாடியிருக்கும் ‘உன் காதல் இருந்தால் போதும்’ மற்றும் சிட் ஸ்ரீராமின் குரலில் உதயமாகி இருக்கும் ‘நீ தொலைந்தாயோ’ பாடல்களும் நெஞ்சை வருடிச் செல்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles