“ காத்தம்மா “ படத்திற்காக
குமுளியில் பிஜுராம் – ஆதிரா காதல் பாட்டு
போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜோஸ்.எம்.தாமஸ் ராய் தயாரிக்கும் படத்திற்கு “ காத்தம்மா “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் பிஜுராம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – ஜில்லன்
பாடல்கள் – பரிதி
கலை – மில்டன்
நடனம் – ரமேஷ்ரெட்டி
எடிட்டிங் – ரேய்மண்ட்
திரைக்கதை, வசனம், ரூபக் – நிஸ்க்
தயாரிப்பு – ஜோஸ்.எம்.தாமஸ் ராய்
ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் M.D.சுகுமார். இவர் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
லவ் வித் திரிலர் கதை இது. பாதிக்கப் பட்டவர்கள் பழிவாங்கும் கதை !
இந்த படத்திற்காக சமீபத்தில் குமுளியில் பிஜு ராம் – ஆதிரா சம்மந்தப் பட்ட பாடல் காட்சியான “ சாய்ந்த செடியொன்று
“ துளிர்க்குதே பாடல் படமாக்கப்பட்டது.
அணைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார்.