“செல்வந்தன், புருஸ்லீ – 2 வெற்றிப் படங்களை தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “எவன்டா“ தெலுங்கில் “பழுப்பு“ என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் “எவன்டா“ என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த படத்தில் ரவிதேஜா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஸ்ருதிஹாசன், அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராய் லட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஜெய் ஜெயபிரகாஷ், ஆதித்யா மேனன், பரமாஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வின்சென்ட், இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – அருண்பாரதி, திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம். கதை – கோனா வெங்கட், கே.எஸ்.ரவீந்திரா, நடனம் – ராஜுசுந்தரம், பிருந்தா, சேகர், கலை – ஏ.எஸ்.பிரகாஷ்
திரைக்கதை, இயக்கம் – கோபிசந்த், இணைத் தயாரிப்பு – வெங்கட்ராவ், சத்ய சீத்தாலா, தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்,
வசனம், தமிழ் உருவாக்கம் – ARK.ராஜராஜா.
படம் பற்றி தமிழ் உருவாக்கம் செய்திருக்கும் A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம்…
இந்த படம் காமெடி கலந்த கமர்ஷியல் படம். ரவி தேஜா படம் என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. அது போல் இந்த படத்திலும் காமெடி கலாட்டா செய்திருக்கிறார்.படத்தில் ஐந்து சண்டைக் காட்சிகள் இருக்கிறது ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். தமனின் இசை அனைத்து படங்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும். தெலுங்கில் தமனை இசையமைப்பாளராக அறிமுகப் படித்தியவர் ரவி தேஜா தான் அதனால் இந்த படத்திற்கு கூடுதல் ஸ்பெஷல் இருக்கும். இந்த படம்தான் ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கில் மெகா ஹிட் படம். நடிகை அஞ்சலிக்கும் மிகப்பெரிய பலமாக இருந்ததும் இந்த படம்தான். படம் இம்மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது என்றார் ARK.ராஜராஜா