கீர்த்தி சுரேஷ்கு அடித்தது ஜாக்பாட் ஆமாம் தற்போது சிவகர்த்திகேயன்வுடன் ரஜினிமுருகன் படத்தில் நாயகியாக நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தில் நம்ம தனுஷ்வுடன் ஜோடி சேருறாங்க
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தை முடித்திருக்கும் தனுஷ், அதனைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கவிருக்கும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணமாகும் ஒரு இளைஞனின் கதையை படமாக்க இருக்கிறார் பிரபு சாலமன். இதற்காக, ரயிலில் பயணம் மேற்கொண்டு படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வந்தார். .
படத்தின் நாயகியாக புதுமுக நடிகை ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து ஆலோசனை செய்து வந்தார்கள். தற்போது இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வந்தாலும், இன்னும் ஒரு படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இமான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.