.
.

.

Latest Update

”குற்றம் கடிதல்”


284038-kathudiஒரு வருடம் தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால் அதற்க்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் அல்ல. உழைப்பும், தேர்ந்து எடுக்கும் திறனும் கூட காரணமாக தான் இருக்கும்.ஜே எஸ் கே film corporation நன்மதிப்பு , கௌரவம், பெருமை என்ற மூன்று ரத்தினங்களை தன்னுடைய கிரீடத்தில் பதித்து வைத்து இருக்கிறது.2013 ஆண்டில் ‘தங்க மீன்கள்’ இந்தியன் பனோராமா,தேசிய விருது, சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆகிய விழாக்களில் அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வென்றதை போல 2014 ஆம் ஆண்டின் கௌரவத்தையும் , அங்கீகாரத்தையும் ‘குற்றம் கடிதல்’ வென்றுக் கொண்டு இருக்கிறது.புதிய இயக்குனர் பிரம்மா ஜி இயக்கத்தில் பெரும் பெயரும் புகழும் பெற்ற ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் இந்தியன் பனோரமா, சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆகியப்திரைபட விழாக்களில் பெரும் அங்கீகாரத்தை ஈன்றுக் கொண்டு இருக்கிறது.
‘ என்னுடைய பட நிறுவனமான ஜே எஸ் கே பிலிம் corporation தொடர்ந்து தரமான படங்கள் வழங்கி பெரும் மதிப்பு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. இந்தியன் பனோரமாவை தொடர்ந்து தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்து எடுக்க பட்டதில் எனக்கு மிக்க பெருமை.கடந்த வருடம் தங்க மீன்கள் பெரும் பெயரையும் புகழையும் ஈன்றதை போல , இந்த வருடம் குற்றம் கடிதல் ஈன்று வருவதில் பெரும் மகிழ்ச்சி.வெற்றி பெறுவது ஒரு வாடிக்கையாக இருப்பதும் பெருமை. இந்த பெருமையே எனக்கு மேலும் இத்தகைய படங்களை தயாரிக்க உத்வேகமாக இருக்கிறது.ஹோல்லி வூட் நிறுவனமான R V Weinstein நிறுவனம் எப்படி விருதுகளுக்கான படங்களை தயாரித்து புகழ் பெற்றதோ அத்தகைய புகழை என் நிறுவனமும் அடையும் ‘ என நம்பிக்கையுடன் தெரிவித்தார் சதீஷ் குமார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles