.
.

.

Latest Update

குழந்தைகளை கவர வரும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ப்ரூஸ் லீ !


Bruce Lee Movie Pooja Stills (10)கெணன்யா பிலிம்ஸ் செல்வ குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “ ப்ரூஸ் லீ”. இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார் , நாயகியாக கீர்த்தி கர்பந்தனா நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டி ராஜ் இப்படத்தை இயக்குகிறார். அக்ஷன் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாலா சரவணன் , முனிஸ் காந்த் [ராமதாஸ்] மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

ப்ரூஸ் லீ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்த சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களிடம் “ இது நம்ம ஆளு” “ ஹைக்கூ “ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் பாண்டி ராஜ். குழந்தைகளை மையமாக கொண்டு படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாண்டிராஜிடம் இருந்து வந்துள்ள பிரஷாந்த் பாண்டிராஜு தற்போது இயக்கவுள்ள “ ப்ரூஸ் லீ “ திரைப்படமும் குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கபடவுள்ள லாப்ஸ்டர் வகையிலான அக்ஷன் திரைப்படம்.

ஹாரர் , கல்ட் என்று வெவ்வேறு வகையிலான களங்களில் பயணித்து கொண்டு இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்கு இந்த படம் மிகவும் புதுமையான ஒரு படமாக இருக்கும் என்றும். அக்ஷன் கலந்த காமெடி கதையில் முதன்முறையாக நாம் இந்த படத்தில் அவரை பார்க்கலாம் என்றும் கூறுகிறார் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ்.
“ ப்ரூஸ் லீ “ படத்தின் படத்தின் படபிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles