.
.

.

Latest Update

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணையும் புதிய படம்..


18th Production of AGS (3)கல்பாத்தி எஸ் அகோரம் வழங்கும், ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணையும் புதிய படம்.

அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது 18ம் தயாரிப்பாக கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணையும் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றார்கள்.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா மற்றும் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்டின் 18ம் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகி, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles