.
.

.

Latest Update

“ கொடி “ திரைப்படத்தை விளம்பரபடுத்த தனுஷ் மற்றும் படக்குழுவினர். பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர் ..


“ கொடி “ திரைப்படத்தை விளம்பரபடுத்த 25 , 26 ஆம் தேதியில் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர் தனுஷ் – த்ரிஷா மற்றும் படக்குழுவினர் !!

கிராஸ் ரூட் பிலிம்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் வழங்கும் திரைப்படம் “ கொடி “ இப்படத்தில் நடிகர் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அரசியலை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை “ எதிர்நீச்சல் “ “ காக்கி சட்டை “ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக வெளிவரும் இப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் காணும் வகையில் சென்சார் குழு “ யு “ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வருகிற அக்டோபர் 25 , 26 ஆகிய தேதிகளில் சேலம் , கோவை , திருச்சி , மதுரை , நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு “ கொடி “ திரைப்படத்தை விளம்பரபடுத்த நாயகன் தனுஷ் , நாயகி த்ரிஷா , பாடலாசிரியர் அருண்ராஜாகாமராஜா , நடிகர் காலி வெங்கட் ஆகியோர் செல்கின்றனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles