இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்களின் நாம் இயக்கத்தின் சார்பாக சென்னை கோட்டுர், கோட்டுர் புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்துள்ளனர். தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளை செய்து வரும் இந்நிலையில் நாம் இயக்கம் அரசுக்கு தோள் கொடுத்து உதவும் வகையில் பணியை செய்து வருகிறது.
சூர்யா நகரை தத்தெடுத்தபின் முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர் இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான நாம் குழுவினர். மேலும் மருத்துவ உதவிகள், கலந்தாய்வுகள் உட்பட பல உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளனர்…