நடிகர் தனுஷ் அவர்களின் தனிச்சிறப்புடைய முதல் ஹாலிவுட் படத்தை பற்றி அவர் பகிர்ந்துகொள்வது ,
முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் தந்துள்ளது. நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம் என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அமசங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன். எப்போதும் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கும் , பத்திரிக்கை ,தொலைகாட்சி மற்றும் வலைதள நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்