இந்திய இசை உலகில் கோலோச்சும் இசை அமைப்பாளர்கள் சலீம் -சுலைமான் மெர்சண்ட் இரட்டையர்களில் ஒருவரான சலீம் Merchant தமிழில் பாடகராக அறிமுகம். மிக சிறந்த எதிர் காலம் உண்டு என்று எல்லோராலும் கணிக்க படும் லியான் ஜேம்ஸ் இசை அமைக்கும் ‘கோ 2’ படத்தில் சலீம் பாடகராக அறிமுகமாகிறார். கோ 2 படத்தின் பாடல்கள் ஐ tunes தர வரிசையில் முதன்மையான பாடலாக நீடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘ கண்ணம்மா’ பாடலின் மெட்டை அமைக்கும் போதே இந்த பாடலை சலீம் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன் . என் எண்ணத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் தெரிவித்தேன், அவரும் சற்றும் தயங்காமல் ,அதனால் என்ன பாடல்கள் தான் மக்களுக்கு படம் பார்க்கும் ஆவலை தூண்டும் . ஆகவே இந்தப் பாடல் வெற்றி பெறும் என்றால் யாரை வேண்டுமானால் அழைத்து கொள்ளுங்கள் என்றார். நானும் பாடல் வரிகளுடன் மெட்டையும் மின்னஞ்சல் வழியாக சலீமுக்கு அனுப்பினேன். அவரும் உடனடியாக எப்போது பதிவு செய்யலாம் எனக் கேட்டதோடு வந்து பாடியம் கொடுத்தார். பாடல் பதிவின் போது அவரோடு செலவிட்ட அந்த சில மணி நேரங்கள் என் வாழ்வில் மறக்க முடியாது , நிறைய கற்றுக் கொண்டேன். இன்று ‘கண்ணம்மா பாடல் இந்த அளவுக்கு வெற்றிப் பெற்றதற்கு அவர் தான் காரணம் ‘ என்கிறார் லியான் ஜேம்ஸ் .