.
.

.

Latest Update

க்ரைம் கலந்த நகைச்சுவை படமாக திரைக்கு வரும் “ஜில் ஜங் ஜக்”


Jil Junk Juk Movie Stills (1)பொறியாளராக இருந்து திரைப்பட துறையில் நுழைந்து இயக்குனராக வெற்றிப் பெற்றவர்கள் வரிசையில் இணைய வருகிறார் ‘ஜில் ஜங் ஜக்’படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி.

‘இயற்பியல் பாடத்தில் உள்ள அடிப்படை வடிவங்களே இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரங்களான ஜில் (நாஞ்சில் சிவாஜி), ஜங் (ஜம்புலிங்கம) மற்றும் ஜக் (ஜாகுவார் ஜகன்) ஆகியோரை நிர்மாணிக்க உதவியது.இந்தக் கதை அவர்களது பயணத்தை பற்றியக் கதை. என்னை போன்ற புதிய இயக்குனர்களுக்கு சித்தார்த் போன்ற தயாரிப்பாளர்கள் கிடைத்து இருப்பது ஒரு அதிர்ஷ்டமே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 38 நாட்கள் மட்டுமே நடந்தது.இந்தப் படம் க்ரைம் கலந்த நகைச்சுவை படமாகும்.எனது வாழ்க்கை ஒரு இயக்குனராக் துவங்கி இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். குறும் படங்களும் , குறும் கதைகளும் என் இயக்குனர் கனவுக்கு உரமாக இருக்கும். என் படத்தில் உள்ள பஞ்ச் வசனமான ‘ ஒரு பெரிய வேலைய சாதிக்கனும்னா நெறைய சின்ன வேலையையும் பண்றதுக்கு யோசிக்கக் ஓடாது’ என்பதை போலதான் என் வாழ்க்கையும், என்றார் நம்பிக்கையுடன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles