நேற்று (27/05/2016) கமலா திரையரங்கில் ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும் DNS மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் கககபோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறபித்த உயர்திரு. ஜெ . அன்பழகன் எம்.எல்.எ அவர்கள் இப்போது சிறுபடங்கள் பெரியபடங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளீயிடுவதில் பிரச்சனை வருகிறது,அதுபோல்தான் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியீட கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே , அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன் இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார் , அதன் பின்னரே படம் வெளியானது இதுபோல நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது , அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு என்று கூறி முடித்தார்.
இத்திரைப்படத்தில் பவர் ஸ்டார், சிங்கம் புலி,m.s. பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி,ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்,இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.