.
.

.

Latest Update

க.ராஜீவ் காந்தியின் ”தக்கன பிழைக்கும்’’ குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..


thakkana pizhaikkum1விகடன் பட்டறை தமிழ் சினிமாவுக்கு சிறந்த இயக்குனர்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது.குக்கூ இயக்கிய ராஜுமுருகன், கள்ளப்படம் இயக்கிய வடிவேல், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராகி தற்சமயம் திரை உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கும் இரா.சரவணன் ஆகியோர் விகடனின் உருவாக்கம் தான்.

அந்த வகையில் விகடனில் தலைமை நிருபராய் பணிபுரிந்துவிட்டு தற்போது குமுதம் இதழில் முதன்மை நிருபராய் பணிபுரியும் க.ராஜீவ் காந்தி திரை உலகை நோக்கிய முதல் முயற்சியாக ஒரு குறும்படத்தை உருவாக்கி வருகிறார்.

இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் குறும்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவிருக்கிறது. அந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் போஸ்டர்கள் இதோ உங்கள் பார்வைக்காக…

“பத்திரிகையாளனாக ப் பணிபுரிந்த அனுபவங்களில் என்னைச் சுற்றியே ஏராளமான கதைகளை உணர்ந்துள்ளேன். எனவே என்
படைப்புகள் அனைத்திலுமே ஏதோ ஒரு உண்மைச் சம்பவமோ, சம்பவங்களோ தான் மையமாக இருக்கும். ”தக்கன பிழைக்கும்’’ குறும்படமும் அப்படிப்பட்ட முக்கிய அன்றாட நிகழ்வுகளை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை தான்’’, என்கிறார் பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles