“சண்டமாருதம் “ படத்துக்காக
32 மணிநேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்
சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருகிறது. இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் .இருவரும் நடிக்கிறார்கள் முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார் ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பிராமையா, வெண்ணிறாடை மூர்த்தி, சிங்கம் புலி, காதல் தண்டபாணி நளினி, டெல்லிகணேஷ் , மோகன் ராம், ஜி.எம்.குமார், சந்தான பாரதி, ஆதவன், சூப்பர் குட் கண்ணன், ரேகா சுரேஷ், வின்சென்ட் அசோகன், அருண் சாகர், கானா உலகநாதன், பர்பி ஹேண்டே ஆகியோர் நடிக்கிறார்கள் .
இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார். ஒளிப்பதிவு – N.S.உதய்குமார் / இசை – ஜேம்ஸ்வசந்தன் பாடல்கள் – மோகன்ராஜ், சுமதிஸ்ரீ
எடிட்டிங் – V.T. விஜயன் / கலை – ரூபேஷ் / ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா
நடனம் – கல்யாண், விஷ்ணு தேவா தலைமை செயல் அதிகாரி – பா..சக்திவேல்
தயாரிப்பு ஒருங்கினைப்பு – A.N.சுந்தரேசன் / தயாரிப்பு மேற்பார்வை – வினோத் சபரீசன் . தயாரிப்பு – R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன். வசனம் எழுதி இயக்குகிறார் – A.வெங்கடேஷ் . படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷிடம் கேட்டோம்….வித்தியாசமான ஆக்ஷன் படம் இது. இந்தப் படத்தின் கதையம்சம் பரபரப்பான சம்பவங்களை முடிச்சிப் போட்டிருக்கும். சண்டமாருதம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகாக சரத்குமார் 32 மணிநேரம் தூங்காமல் ஓய்வே எடுக்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்க்கு காரணமே மீராநந்தன் தான்.
சில மாதங்களுக்கு முன்பு மீராநந்தன் துபாயில் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் வர்ணனையாளராகா சேர்ந்து விட்டார். அதனால் படப்பிடிப்புகாக அந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்கி கிளைமாக்சை முடித்தோம். அவர் அனுமதி வாங்கித் தந்த நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டுமானால் யாரும் தூங்க கூடாது. தூங்கவும் விடகூடாது என்று முடிவெடுத்து கஷ்டப் பட்டோம் கிளைமாக்ஸ் முடிந்தது. அதற்க்கு பிறகு ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் உட்பட எல்லோரும் அவரை பாராட்டி மலர் கொத்து கொடுத்து அனுப்பி வைத்தோம் என்றார் A.வெங்கடேஷ்