வெற்றி கூட்டணியான
சந்தானம் – டைரக்டர் மணிகண்டன்
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் இணையும் படம்
தில்லுக்கு துட்டு மூலம் மாபெரும் வெற்றி பெற்ற நாயகன் சந்தானம் – கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பட இயக்குனர் மணிகண்டன் – பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வாசன் விஷீவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இந்த கூட்டணி இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க நகைச்சுவை, பேமிலி என்டர்டைன்மென்ட் கமர்ஷியல் படமாக உருவாக்குகிறார்கள். கதாநாயகி, மற்ற நட்சத்திரங்கள் , தலைப்பு ஆகியவை விரைவில் அறிவிக்கப் பட உள்ளது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. வித்தியாசமான காமெடி படமாக இது இருக்கும் என்றார்கள் படக்குழுவினர்.
வாசன் பிரதர்ஸ் – சிவஸ்ரீ பிக்சர்ஸ் – வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் 60 ஆண்டுகளாக படத் தயாரிப்பில் தங்களது சகாப்தத்தை அழுத்தமாக பதித்துள்ள இந்த தயாரிப்பாளர்கள் 55 சாதனைப் படங்களைத் தயாரித்துள்ளார்கள். தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரிக்கிறார்கள். தரமான படங்கள் தான் தங்களது தாரக மந்திரம் என்கிற தயாரிப்பாளர்கள் சந்தானம் – மணிகண்டன் கூட்டணி படத்தையும் கமர்ஷியல் மற்றும் வித்தியாசமான படமாக உருவாக்க உள்ளனர்.