.
.

.

Latest Update

கதாநாயகிகள் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகி லவ்லின்.


கதாநாயகிகள் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகி லவ்லின்

அழகிய தோற்றத்திற்க்கும் எதார்த்த நடிப்பாற்றலுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய சகோதரிகள் சரிதா மற்றும் விஜி. பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற இவர்களின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளமை ததும்பும் கதாநாயகி அறிமுகமாகவுள்ளார்.

சந்திரசேகர் – விஜி தம்பதியின் மகளான லவ்லின் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகியாக உருவாகவேண்டும் என்ற ஆசை மேலோங்க, குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையலகத்திற்கு அறிமுகமாகிறார் லவ்லின். இவர் மும்பையிலுள்ள அனுபம் கேர் சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ளார்.

தற்போது துபாயில் மனோ தத்துவம் பட்டதாரி படிப்பின் இறுதி ஆண்டை தொடரும் லவ்லினின் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles