“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா வழங்க P.G.மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் P.G.முத்தையாவும் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”இவர்களிருவரும் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் ‘ராஜா மந்திரி”. ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ‘ராஜா மந்திரி’யைத் தொடர்ந்து இந்நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்குகிறார். ’திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ’நான் மகான் அல்ல’ராம் மற்றும் நிறைய புதுமுகங்களின் அறிமுகங்களும் நடிக்கின்றனர். நடிகர் திலகத்தின் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் புகழ் பெற்ற பாடலின் முதல் வரியையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். மூன்றாம் தலைமுறை முதல் இன்றுள்ள சிறார்கள் வரை ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பெற்ற வரிகள் இவை. சொன்னதும் சட்டென்று எல்லோரின் மனதிலும் இடம் பிடிக்கும் என்பதால் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ என்ற பாடல் வரியை படத்தின் தலைப்பாக வைத்தோம். இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றார் இயக்குநர்ராகேஷ். இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. தினம் தினம் பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் அதற்கான தீர்வுடன் விளக்கும் படம் தான் “மறைந்திருந்த பார்க்கும் மர்மமென்ன” ஒளிப்பதிவை P.G.முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’,’உறுமீன்’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை செல்வா R.K. கவனிக்க பாடல்களை பா.விஜய் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சி தருகிறார் விமல். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது “ மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” .