.
.

.

Latest Update

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் அச்சம் என்பது மடமையடா ஒற்றைப் பாடல்.


AYM_Song Contestஎஸ் டி ஆர் உடன் புது முகம் மஞ்சிமா நடிப்பில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து வெளியான ‘தள்ளி போகாதே’ சமூக வலைதளங்களில் மிக மிக பிரபலமான பாடலாக மாறி வருகிறது. இந்த பாடல் ரீமிக்ஸ், டப் ஸ்மாஷ்,என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் சிலவற்றை தேர்ந்து எடுத்து , அவற்றை இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் பகிர்ந்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஆர்வமுள்ள , திறமையான இசை அமைப்பாளர்கள் பங்குக் கொள்ள உள்ள போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துக் கொள்ளப்படும். .

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்குதாரரான டிவோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஷாகிர் முனீர் இந்த வகை போட்டிகள் ரசிகர்கள் இடையே மேலும் ஆர்வத்தை தூண்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles