உடல் பயிற்சிகாகவும் உடல் கட்டு அழகாக இருக்க சைக்கிள் ஒட்டிய ஆர்யா கொஞ்ச நாட்களில் அதன் மேல் உள்ள காதலில் அதன் மேல் உள்ள காதல் என்றுடன் வேற எதையோ நினைக்க வேண்டாம் சைக்கிள் ஒட்டுவதில் ஏற்பட்ட காதல் இன்று சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வரை ஆர்யாவை ஈர்த்து உள்ளது .
ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் பதக்கம் வென்றது குறித்து நடிகர் ஆர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் நடிகர்களில் சைக்கிள் பந்தயங்களில் அதிகமான ஆர்வம் உடையவர் ஆர்யா. படப்பிடிப்பு தளங்களுக்கு சைக்கிளில் செல்வதை பழக்கமாக கொண்டவர்.
50 ஆண்டாக நடைபெற்ற ‘வெட்டர்ன்ருண்டன்’ சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தார். ஜூன் 12ம் தேதி நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆர்யா மற்றும் அவரது அணியினர் ஸ்வீடனுக்கு பயணம் செய்தார்கள்.
‘வெட்டர்ன்ருண்டன்’ போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிருக்கிறார் ஆர்யா. இம்மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில், “வெட்டர்ன்ருண்டன் சைக்கிள் பந்தயத்தில் பதக்கம் வென்றுவிட்டேன். இதற்கு காரணமாக இருந்த முருகப்பா குழுமத்தின் அருண் அழகப்பன் சாருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறுதுணைபுரிந்தவர்களுக்கும் ஊக்கம் அளித்தவர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆர்யாவின் இந்த பதக்க வெற்றிக்கு அவரது நண்பர்களும் மற்றும் பல்வேறு திரையுலகினரும் ட்விட்டர் தளத்தில் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.
நடிப்போடு சில நல்ல விஷயங்களை செய்யும்போது அதன் பலன் பாருங்கள் ஒரு நடிகன் நடிக்க மட்டும் இல்லை நாட்டுக்கு நல்ல பெயர் வாங்க முடியும் என்பதுக்கு இது சான்று …..